கடலட்டை பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பாரிய நெருக்கடியில்! 160 மில்லியன் ரூபா இழப்பு
Kilinochchi
Northern Province of Sri Lanka
Disaster
By Independent Writer
டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு கடலட்டை பண்ணையாளர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரணைத்தீவில் 103 கடலட்டைப் பண்ணையாளர்கள் 125 ஏக்கரில் கடலட்டை வளர்ப்பில் ஈடுப்பட்டிருந்ததாகவும், இதில் நான்கு இலட்சம் கடலட்டைகள் காணப்பட்டதாகவும். அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நான்கு இலட்சம் கடலட்டை
குறித்த வெள்ள அனர்த்தம் காரணமாக நான்கு இலட்சம் கடலட்டைகளும் இறந்துவிட்டதாகவும், இதன் பெறுமதி சுமார் 160 மில்லியன் ரூபா எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, நான்கு படகுகள், எட்டு வள்ளங்கள்,10 குடிசைகள்,அட்டைப்பண்ணை வலை 200,நண்டு வலை 450,பட்டிவலை 150 கூட்டம் என்பனவும் அழிவடைந்துள்ளனதாக இரணைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி - சிவா
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்