சுவிட்சர்லாந்தில் ஈழத்தமிழ் தொழிலதிபர்களை சந்தித்த ஹரிணி...! மறைந்திருக்கும் அரசியல் நோக்கம்
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மகாநாட்டில், இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய, ஈழத்தமிழ் தொழிலதிபர் சிறி இராசமாணிக்கத்தை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சர்வதேசத் தலைவர்கள் சங்கமிக்கும் இந்த உயர்மட்ட மேடையில், புலம்பெயர் தமிழ் முதலீடுகளை இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இச்சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, வட-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் பசுமை ஆற்றல் திட்டங்களில் புலம்பெயர் தொழில் சமூகத்தின் பங்களிப்பை ஒரு புதிய இணக்கப்பாட்டின் ஊடாகப் பெற்றுக்கொள்ள இந்தச் சந்திப்பு வழிவகுத்துள்ளது.
சர்வதேசப் பொருளாதாரப் போட்டிகளுக்கு மத்தியில், இத்தகைய உயர்மட்டச் சந்திப்புகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால முதலீட்டுச் சூழலில் எத்தகைய நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தநிலையில் குறித்த மகாநாட்டின் தீர்மானங்கள் மற்றும் பிரதமர் - சிறி இராசமாணிக்கம் இடையிலான சந்திப்பின் பின்னணி குறித்து ஆழமான தரவுகளுடன் விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |