யாழில் கால்நடைகளை திருடி இறைச்சியாக்கிய கும்பல்: சுற்றி வளைத்த மக்கள்
யாழில் (Jaffna) வேலணை பிரதேசத்தில் கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்து வந்த கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (12) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வேலணை பிரதேசத்தில் அண்மைக் காலமாக பெறுமதிமிக்க வளர்ப்புக் கால்நடைகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளது.
முறைபாடுகள்
இதனால் பண்ணையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வரும் நிலை தொடர்ந்துள்ளது.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு முறைபாடுகள் செய்தும் திட்டமிட்ட இந்த திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் பெரும் சவால் இருந்து வந்துள்ளது.
இதையடுத்து, பொதுமக்கள் தமது கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேலணைக்கு வரும் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் கண்காணிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
காவல்துறையினர் நடவடிக்கை
இந்தநிலையில், இன்று (12) அதிகாலை பட்டா ரக வாகனம் ஒன்றில் ஐந்து பேரடங்கிய திருடுக் கும்பல் ஒன்று வங்களாவடிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதை மக்கள் அவதானித்துள்ளனர்.
குறித்த நபர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில், நிலைமையை சுதாகரித்துக்கொண்ட மக்கள், பட்டா ரக வாகனத்தை மறித்து அதில் இருந்த ஒருவரையும் இறைச்சியாக்கப்பட்ட மாட்டுடன் பிடித்து நயப்புடைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதில், 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஏனைய நால்வர் தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடியவர்களை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
