பாடசாலை விடுமுறை: சிறிலங்கா காவல்துறை விடுத்த வேண்டுகோள்
பாடசாலை விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணங்கள் செல்லும் போது அவதானமாக செயற்படுமாறு சிறிலங்கா காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
குறித்த வேண்டுகோளை, காவல்துறை ஊடக பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான நிஹால் தல்துவ (Nihal Thalduwa) விடுத்துள்ளார்.
இதன்போது, வாகனம் ஓட்டும்போதும், வெவ்வேறு இடங்களில் குளிப்பதற்கு செல்லும் போதும் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கல்வி அமைச்சின் அறிவிப்பு
இதேவேளை, சுற்றுலா தளங்களில் சிறிய பிள்ளைகள் குளிக்கும் போது ஆபத்தான இடங்களை தெரிவு செய்வதை தவிர்க்குமாறும் காவல்துறை மா அதிபர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் 22 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், கல்வி அமைச்சு விடுமுறை வழங்கியுள்ளது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |