மத்திய வங்கியின் வட்டி விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (21) நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையானது, ஓரிரவு கொள்கை விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 7.75% வீதத்தில் பராமரிக்க தீர்மானித்துள்ளது.
நாணயக் கொள்கை
இதன் மூலம் நாணயக் கொள்கையை மேலும் தளர்வடையச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது.
நாணயக் கொள்கை நிலையின் அளவிடப்பட்ட இத்தளர்த்தலானது உலகளாவிய நிச்சயமின்மைகள் மற்றும் தற்போதைய குறைவடைந்த பணவீக்க அழுத்தங்கள் என்பவற்றிற்கு மத்தியில் பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கினை நோக்கி வழிநடாத்துவதில் ஆதரவளிக்குமென சபை நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
