தையிட்டி விகாரை விவகாரம் : அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் எம்.பி வலியுறுத்தல்

Jaffna Gajendrakumar Ponnambalam Government Of Sri Lanka South Africa
By Sathangani May 22, 2025 11:27 AM GMT
Report

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க தென்னாபிரிக்க அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தென்னாபிரிக்க தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ் தேசிய பேரவை மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க (South Africa) தூதுவருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (22) காலை கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றது.

இதன்பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ”கடந்த 2025 மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வட மாகாணத்தின் சுமார் 6,000 ஏக்கர் காணிகளை அரச காணியாக சுவீகரித்து திட்டமிட்ட சிங்கள பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளும் கபட முயற்சியில் மூன்று மாத காலத்தில் மக்கள் தமது காணிகளை உறுதிபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அரசு வெளியிட்ட குறித்த வர்த்தமானியை அரசு மீளப் பெறவேண்டும்.

சயனைட் கட்டிக்கொண்டு போராடிய ஒரு இனம்: சபையில் ரிசார்ட் எம்.பி ஆவேசம்

சயனைட் கட்டிக்கொண்டு போராடிய ஒரு இனம்: சபையில் ரிசார்ட் எம்.பி ஆவேசம்

பயங்கரவாதச் சட்ட அச்சுறுத்தல்

வடகிழக்கு மக்கள் யுத்தகாலத்தில் பலதடவைகள் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களின் சொந்தமான ஆவணங்கள் அழிவடைந்தும் தொலைந்துமுள்ளன.அத்துடன் சுனாமி மூலம் எமது மக்கள் சொத்துக்கள் ஆவணங்களை இழந்தார்கள்.

தையிட்டி விகாரை விவகாரம் : அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் எம்.பி வலியுறுத்தல் | Land Grab Gazette In The North Pressure On Govt

ஆகவே ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்துவது சாத்தியமற்ற விடயம். அத்துடன் போர் காரணமாக தமிழீழ மக்களின் சனத்தொகை பெருமளவில் புலம்பெயர்ந்துள்ளது. இந்த மக்கள் பயங்கரவாதச் சட்ட அச்சுறுத்தல் காரணமாகவும் நாட்டினை விட்டு வெளியேறினார்கள்.

எனவே இவர்களின் நோக்கம் மக்களின் காணி பிரச்சினைகளை தீர்ப்பது இல்லை. மாறாக மக்களின் ஆவணங்களற்ற காணிகளை அரச காணிகளாக சுவீகரிப்பதே இவர்களது நோக்கமாக உள்ளது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரித்துக்கள் வழங்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுகருத்திற்கு இடமில்லை.

ஆனாலும் இந்த வர்த்தமானி மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அபகரிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினோம்.

அரச நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்க புதிய முறைமை அறிமுகம்

அரச நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்க புதிய முறைமை அறிமுகம்

குருந்தூர்மலை விவகாரம்

இரண்டாவது குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்திற்கு 79 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே சொந்தமானதென 1932 ஆம் ஆண்டு வர்த்தமானி வெளிப்படுத்துகிறது.

தையிட்டி விகாரை விவகாரம் : அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் எம்.பி வலியுறுத்தல் | Land Grab Gazette In The North Pressure On Govt

எனினும் அதற்கு மேலதிகமாக 325 ஏக்கர் காணியினை குறித்த தொல்பொருட் திணைக்களத்திற்கு வழங்க வேண்டுமென கடந்த ஆட்சிக்காலத்தில் புத்த பிக்கு அரசிடம் கோரியிருந்தார்.

எனினும் தமிழ் மக்கள் விவசாயம் செய்துவந்த காணிகள் என்பதனால் அவர்களது விவசாய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு அப்போதய சனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த 325 ஏக்கரிலும் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது.

எனினும் வழமைபோன்று குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மூன்றுபேர் நீதிக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு இரண்டுபேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வனத்துறையின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: குகதாசன் கடும் கண்டனம்

வனத்துறையின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: குகதாசன் கடும் கண்டனம்

தையிட்டி சட்டவிரோத விகாரை

ஜனாதிபதி மட்டத்தில் தீர்வு எட்டபட்ட ஓரு தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தாமல் விவசாய நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த வயல்களுக்கு நீர்விநியோகம் செய்ய வேண்டிய குளத்தில் தமிழ் மக்கள் மீன்பிடியில் ஈடுபடவும் தடையும் விதிக்கப்பட்டுள்ளதோடு விவசாயத்திற்கு குறித்த நீரை பயன்படுத்த தடையையும் விதித்துள்ளனர்.

தையிட்டி விகாரை விவகாரம் : அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் எம்.பி வலியுறுத்தல் | Land Grab Gazette In The North Pressure On Govt

இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல்கள் எதுவும் அற்ற குறித்த பகுதியில் மக்கள் சுதந்திரமாக தொழில் செய்வதனை உறுதிப்படுத்தவும். அநீதியான முறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு விவசாயிகளையும் விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

மூன்றாவதாக தையிட்டி சட்டவிரோதமான விகாரை தொடர்பில் பேசியிருந்தோம் சட்டவிரோதமான விகாரை என்று தெரிந்தும் இன்னமும் அந்த காணிகளின் உரிமையாளர்களிடம் காணிகளை வழங்காது அரசின் செயற்பாடுகள் தொடர்கின்றது.

தையிட்டி விகாரை சட்டவிரோதமானது, தொல்பொருளுடன் தொடர்பு அற்றது, சட்டவிரோதமாக கட்டப்பட்டது அகற்றபட்டே ஆகவேண்டும். காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படல் வேண்டுமெனவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னுடுக்க வேண்டுமெனவும் தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளேன்” என  தெரிவித்தார்.

நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி கைது

நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025