மின்னல் தாக்கியதில் மைதானத்திலேயே கால்பந்து வீரர் பலி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
மின்னல் தாக்கியதில் தாய்லாந்து கால்பந்து வீரர் ஒருவர் மைதானத்திலேயே உயிரிழந்ததாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
தென் தாய்லாந்தின் சுங்கை கோலோக் பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
24 வயதான சோஃப்வான் அவா என்ற வீரரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்தில் பெரும் சோகம்
சன்டிபாப் விளையாட்டரங்கில் சொம்கொல்ட்ஸ் மற்றும் அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சொம்கொல்ட்ஸ் அணியின் வீரரான சோவ்யான் அவேய் மீது திடீரென மின்னல் தாக்கியுள்ளது.

மின்னல் தாக்கியதில் அவர் மைதானத்திலேயே சரிந்து விழுந்தார். உடனடியாக சக வீரர்கள் மற்றும் அவசர வைத்திய குழுவினர் அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கால்பந்து வீரர் உட்பட மொத்தம் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி வீரர் உயிரிழந்த இந்தச் சம்பவம் தாய்லாந்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |