சூரியனின் அரிய அதி துல்லியப் காட்சி வெளியீடு! மர்மங்களை கண்டறிந்த விஞ்ஞானிகள்

United States of America Germany World Technology
By Dharu Aug 06, 2026 03:03 PM GMT
Report

சூரியனின் மேற்பரப்பில் இதுவரை தெளிவாகக் காணப்படாத மிகச் சிறிய சுழல் அமைப்புகள் மற்றும் வேகமாக நகரும் கருமையான கோடுகளை, உலகின் மிக சக்திவாய்ந்த சூரிய தொலைநோக்கி முதன்முறையாக பதிவு செய்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு, சூரியனின் செயல்பாடுகள் குறித்த முக்கிய மர்மங்களுக்கு புதிய விளக்கத்தை வழங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (NSF) டேனியல் கே. இனோயே சூரிய தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட புதிய படங்கள், சூரியனின் கண்களுக்கு தெரியும் வெளிப்புற அடுக்கான ஒளிமண்டலத்தில் (Photosphere), இதற்கு முன்பு தெளிவாகப் பதிவாகாத கெல்வின் -  ஹெல்ம்ஹோல்ட்ஸ் நிலையற்ற தன்மை (Kelvin–Helmholtz Instability) என்ற இயற்பியல் நிகழ்வை முதன்முறையாக வெளிக்கொணர்ந்துள்ளன.

நிலவின் மறுபக்கத்தை முதன்முறையாக நேரில் காணவுள்ள மனிதர்கள்! ஆர்டெமிஸ் II சாதனை

நிலவின் மறுபக்கத்தை முதன்முறையாக நேரில் காணவுள்ள மனிதர்கள்! ஆர்டெமிஸ் II சாதனை

தேசிய சூரிய ஆய்வகம்

இந்த ஆய்வில் அமெரிக்க தேசிய சூரிய ஆய்வகம், ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் சூரிய மண்டல ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட வளிமண்டல ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

சூரியனின் அரிய அதி துல்லியப் காட்சி வெளியீடு! மர்மங்களை கண்டறிந்த விஞ்ஞானிகள் | Scientists Discover Rare Mysteries Of The Sun

கடந்த ஏப்ரல் 14, 2025 அன்று சூரியக் கறைக்கு அருகிலிருந்த செயலில் உள்ள ஒரு பகுதியை ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கி மூலம் அவதானித்தனர்.

நான்கு மீட்டர் விட்டமுள்ள கண்ணாடி மற்றும் அதிநவீன உயர் தெளிவுத் திறன் கொண்ட ஒளிப்பதிவு அமைப்பின் உதவியால், சிறிய தொலைநோக்கிகளால் இதுவரை காண முடியாத காந்தப்புல எல்லைகள் மிகத் தெளிவாக பதிவாகின.

சூரியனின் ஒளிமண்டலம், 500 முதல் 2,000 கிலோமீட்டர் அகலமுடைய பிரகாசமான பிளாஸ்மா அணுக்களால் (Granules) மூடப்பட்டுள்ளது. இவற்றின் மையப்பகுதியில் சூடான பிளாஸ்மா மேலே எழுந்து, மேற்பரப்பில் குளிர்ந்த பின்னர் விளிம்புகளின் வழியாக மீண்டும் கீழிறங்குகிறது.

இந்த பிளாஸ்மா அணுக்கள், அதிக காந்தப்புலம் கொண்ட பகுதிகளைச் சந்திக்கும் இடங்களில், சுமார் 20 கிலோமீட்டர் அளவுள்ள மிகச் சிறிய சுழல்கள் மற்றும் குறுகிய கருமையான கோடுகள் உருவாகியிருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

மனிதர்களை நிலவிற்கு சுமந்து செல்லும் ரொக்கெட் வெடித்து சிதறியது : அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது நாசா

மனிதர்களை நிலவிற்கு சுமந்து செல்லும் ரொக்கெட் வெடித்து சிதறியது : அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது நாசா

47 சிறிய சுழல் அமைப்புகள் 

இது தொலைநோக்கியின் கோட்பாட்டு தீர்மானத் திறனின் உச்ச எல்லைக்கு நெருக்கமான அளவாகும். இந்த அளவிலான பொருளை சூரியனில் கண்டறிவது, சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு நாணயத்தை தெளிவாகப் பார்ப்பதற்கு ஒப்பான சாதனை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியனின் அரிய அதி துல்லியப் காட்சி வெளியீடு! மர்மங்களை கண்டறிந்த விஞ்ஞானிகள் | Scientists Discover Rare Mysteries Of The Sun

மேக்ஸ் பிளாங்க் சூரிய மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி மிஷியல் வான் நூர்ட் கூறுகையில், "சூரியனின் மேற்பரப்பில் சுமார் 20 கிலோமீட்டர் அளவிலான அமைப்புகளைப் பதிவு செய்ய வேண்டியிருந்தது.

இது உலகின் மிகப்பெரிய சூரிய தொலைநோக்கிகளாலும், அதிநவீன கணினி மாதிரிகளாலும் மட்டுமே சாத்தியமாகும்" என்றார். ஆய்வின்போது மொத்தம் 47 சிறிய சுழல் அமைப்புகள் பதிவாகின.

அவற்றுக்கிடையேயான சராசரி இடைவெளி 65 கிலோமீட்டராகவும், அவற்றின் அளவு 25 முதல் 170 கிலோமீட்டர் வரையிலும் இருந்தது. அவை வினாடிக்கு 0.67 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கெல்வின்–ஹெல்ம்ஹோல்ட்ஸ் நிலையற்ற தன்மை என்பது, அடுத்தடுத்த திரவங்கள் அல்லது பிளாஸ்மா அடுக்குகள் வெவ்வேறு வேகங்களில் நகரும் போது உருவாகும் இயற்பியல் நிகழ்வாகும்.

வேக வேறுபாடு காரணமாக எல்லைப் பகுதியில் அலைகளும் சுழல்களும் உருவாகின்றன. இந்த நிகழ்வை சூரியனின் ஒளிமண்டலத்தில் முதன்முறையாக நேரடியாகக் கண்டறிந்திருப்பது, சூரியனின் காந்தப்புல இயக்கங்கள் மற்றும் ஆற்றல் பரிமாற்றம் குறித்த எதிர்கால ஆய்வுகளுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மனிதர்களை நிலவிற்கு சுமந்து செல்லும் ரொக்கெட் வெடித்து சிதறியது : அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது நாசா

மனிதர்களை நிலவிற்கு சுமந்து செல்லும் ரொக்கெட் வெடித்து சிதறியது : அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது நாசா

ஆப்பிளின் App Store தேடல் முடிவுகளில் இருந்து மாயமான டெலிகிராம்

ஆப்பிளின் App Store தேடல் முடிவுகளில் இருந்து மாயமான டெலிகிராம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்