ஆப்பிளின் App Store தேடல் முடிவுகளில் இருந்து மாயமான டெலிகிராம்

Apple Apple Vision Pro Telegram
By Dharu Aug 04, 2026 08:48 PM GMT
Report

உலகம் முழுவதும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தேடல் முடிவுகளில் இருந்து டெலிகிராம்(Telegram) செயலி திடீரென மறைந்துள்ளதால், ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்கள் அதனைத் தேடவோ, புதிதாகப் பதிவிறக்கம் செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டெலிகிராமின் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர் பக்கத்தை அணுக முயற்சிக்கும் போது, "Page Not Found" (பக்கம் காணப்படவில்லை) என்ற பிழைச் செய்தி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆப்பிள் நிறுவனமோ, டெலிகிராம் நிறுவனமோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.

ஐபோன் 18 ப்ரோ ரகசியங்கள் கசிவு: டாடா நிறுவனத்திடம் இந்திய அரசு விசாரணை

ஐபோன் 18 ப்ரோ ரகசியங்கள் கசிவு: டாடா நிறுவனத்திடம் இந்திய அரசு விசாரணை

மீண்டும் நிறுவ முடியாத நிலை

மேலும், டெலிகிராமின் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் தரப்பிலிருந்தும் இதுகுறித்து எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.

ஆப்பிளின் App Store தேடல் முடிவுகளில் இருந்து மாயமான டெலிகிராம் | Telegram Disappears From Apple S App Store

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டதா அல்லது ஆப் ஸ்டோர் கொள்கை தொடர்பான நடவடிக்கையின் விளைவாக செயலி நீக்கப்பட்டதா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

இந்நிலையில், ஏற்கனவே தங்களது ஐபோன் அல்லது ஐபேட்டில் டெலிகிராம் செயலியை நிறுவியுள்ள பயனர்கள் வழக்கம்போல் அதனைப் பயன்படுத்த முடியும்.

எனினும், செயலியை நீக்காமல் இருக்குமாறு தொழில்நுட்ப வட்டாரங்கள் அறிவுறுத்தியுள்ளன. ஏனெனில், தற்போதைய சூழலில் ஆப் ஸ்டோர் மூலம் அதை மீண்டும் நிறுவ முடியாத நிலை காணப்படுகிறது.

4800 ஊழியர்களை பணி நீக்குகிறது மைக்ரோசொப்ட் நிறுவனம்

4800 ஊழியர்களை பணி நீக்குகிறது மைக்ரோசொப்ட் நிறுவனம்

iOS பதிப்பிற்கான புதிய புதுப்பிப்பு

புதிய ஐபோன் அல்லது ஐபேட் சாதனங்களைப் பயன்படுத்தத் தொடங்கும் பயனர்களும் டெலிகிராம் செயலியை அதிகாரப்பூர்வமாக நிறுவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்பிளின் App Store தேடல் முடிவுகளில் இருந்து மாயமான டெலிகிராம் | Telegram Disappears From Apple S App Store

மேலும், இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை iOS பதிப்பிற்கான புதிய புதுப்பிப்புகள், பிழைத் திருத்தங்கள், செயல்திறன் மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளும் கிடைக்காமல் போகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, டெலிகிராமின் இணையப் பதிப்பு, விண்டோஸ் மற்றும் மேக்ஓஎஸ் டெஸ்க்டாப் செயலிகள், ஆண்ட்ராய்டு செயலி ஆகியவை வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன.

ஆப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் திடீரென மறைந்ததைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பயனர்கள் சமூக ஊடகங்களில் தங்களது அதிருப்தி மற்றும் குழப்பத்தை வெளிப்படுத்தி, இது தொடர்பான திரைப் பதிவுகளையும் (Screenshots) பகிர்ந்து வருகின்றனர்.

வேகம், பாதுகாப்பு மற்றும் பல்வேறு சாதனங்களில் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வசதி ஆகியவற்றால் பிரபலமான டெலிகிராம், உலகளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டதுடன், அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் குறுந்தகவல் செயலிகளில் முன்னணி இடத்தை வகித்து வருகிறது.

AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச போராட்டங்கள்: புதிய சவாலை சந்திக்கப்போகும் எதிர்காலம்

AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச போராட்டங்கள்: புதிய சவாலை சந்திக்கப்போகும் எதிர்காலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025