சாகர காரியவசத்திற்கு இறுகும் பிடி: நீதிமன்றம் சென்றது காவல்துறை
Sri Lanka Magistrate Court
Sagara Kariyawasam
Priyantha Weerasooriya
By Jaso
பொது வீதியில் வைத்து காவல்துறை மா அதிபரை (IGP)பொதுமக்கள் படுகொலை செய்வார்கள் என, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர கரியவசம் வெளியிட்ட அறிக்கை குறித்து, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இன்று (06) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
உண்மைகளை ஆராய்ந்த பின்னர், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்த காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
காவல்துறை மா அதிபருக்கு நீதிமன்றின் உத்தரவு
அதன்படி, காவல்துறை மா அதிபர்(IGP) பொதுச் செயலாளர் சாகர கரியவசம் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது காவல்துறை மா அதிபர்(IGP) குறித்து வெளியிட்ட அச்சுறுத்தும் அறிக்கையின் திருத்தப்படாத காணொளிக் காட்சிகளை காவல்துறைக்கு வழங்குமாறு கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச இன்று (06) உத்தரவிட்டார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி