ஷிரான் பாசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது !
புதிய இணைப்பு
சமீபத்தில் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தை, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பான விசாரணை ஒன்றின் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார்.
அறிக்கைகளின்படி, ஷிரான் பாசிக் கம்பஹா பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில், தனது தந்தையின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு வீட்டை வாங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஷிரான் பாசிக்கின் தந்தை, சொத்து சம்பந்தமாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (11) CCIB முன் முன்னிலையாக அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
மற்றுமொரு ஆடம்பர வீடு....! ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் CCIB விசாரணை
போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக், கம்பஹா பகுதியில் அமைந்துள்ள ஆடம்பரக் குடியிருப்புத் தொகுதியொன்றில், சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை கொள்முதல் செய்துள்ளதாகவும், அது அவரது தந்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
முடக்க அதிகாரிகள் நடவடிக்கை
இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை இன்றைய தினம் (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல்கார் என அறியப்ஸபடும் மொஹமட் ஷிரான் பாசிக்கின் நெருங்கிய சகாவான ரணதுங்க ஆரச்சிஸே நலின் அர்ஜுன என்பவரால் சட்டவிரோதமான முறையில் ஈட்ப்பட்ட பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் உடமைககளை முடக்குவதற்குச் குற்றவரும்படி விசாரணை பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, வியாழக்கிழமை (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குக் குறித்த சொத்துக்கள் மற்றும் உடமைகள் முடக்கப்பட்டுள்ளன.
விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சந்தேகநபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக்கொண்டு கொள்முதல் செய்யப்பட்ட சொத்துக்களை வேறு எவருக்கும் விற்பனை செய்வதோ, உரிம மாற்றம் செய்வதோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதை தடுத்து, அவற்றை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |