மிக் ஒப்பந்தம் குறித்து அறிக்கை அளித்த பின்னர் FCID-யிலிருந்து வெளியேறிய கோட்டாபய
புதிய இணைப்பு
மிக் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து அறிக்கை அளித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய மிக் விமானக் கொள்முதல் பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி FCID-க்கு வரவழைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, அவர் இன்று காலை (11) FCID-ஐயில் முன்னிலையானார்.

பல மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் தற்போது வெளியேறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச FCIDயில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.
மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்சவை இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் விமானப்படைத் தளபதி
இதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக நேற்று (10) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்.

அங்கு அவர் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் அளித்ததன் பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |