மகிந்தவின் தனிப்பட்ட ஜோதிடர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம்!
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
Bribery Commission Sri Lanka
By Dhilak
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட ஜோதிடராக பணியாற்றியதாக கூறப்படும் பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தனவிடம், லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
அதன்போது, ஆணைக்குழு நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி, அவரிடமிருந்து வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை காரணம்
ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க, அவர் நேற்று(10)முற்பகல் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

“சிரிலிய சவிய” அமைப்பு தொடர்பாக ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்தக் காலகட்டத்தில், அவர் தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர் ஒருவராகவும் பணியாற்றியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்