போர் நிறுத்தம் : ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமம்: நடக்காது என்கிறார் நெதன்யாகு
காசா போர் போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமமான ஆபத்தானது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று கூறினார்.
பயங்கரவாத குழுவை தோற்கடிக்க தனது நாட்டின் இராணுவ நடவடிக்கையை ஆதரிக்க உலக சமூகத்தை அவர் வலியுறுத்தினார்.
ஒருபோதும் இஸ்ரேல் உடன்படாது
“அமெரிக்கா பேள் ஹாபர் குண்டுவெடிப்புக்குப் பிறகு [1941 இல்] அல்லது 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு [2001 இல்] போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளாதது போல,ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரமான தாக்குதல்களுக்குப் பிறகு ஹமாஸுடனான பகையை நிறுத்துவதற்கு இஸ்ரேல் உடன்படாது என நெதன்யாகு வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு ஆங்கில மொழி மாநாட்டின் போது கூறினார்.
"ஹமாஸிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திடம் சரணடைய வேண்டும், காட்டுமிராண்டித்தனத்திற்கு சரணடைய வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அழைப்பு விடுப்பது போர் நிறுத்தத்திற்கான அழைப்புகள், அது நடக்காது" என்று நெதன்யாகு கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து ஐ.நா அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.