சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள மின்சார சபை ஊழியர்கள்
இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் நாளைய தினம் (01) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலம், கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக மின்சார சபை ஊழியர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்படாமை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மக்களை அசௌகரியப்படுத்தும் வகையில் மின் கட்டணத்தை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு எதிராக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மின்சார சபையை விற்பனை செய்ய
அத்துடன் இலங்கை மின்சார சபையானது இலாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாகும். எனினும் நட்டத்தில் இயங்குவதாக அரசாங்கம் கூறி, பல வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு இலங்கை மின்சார சபையை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
எனவே, இந்த விடயங்களுக்கு தமது சங்கம் எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.