நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு - காரணத்தை வெளியிட்ட மின்சார சபை
கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டுக்கான காரணத்தை இலங்கை மின்சார சபை ( Ceylon Electricity Board (CEB) வெளியிட்டுள்ளது.
அதன்படி, மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக சபை தெரிவித்துள்ளது.
மின் வெட்டு குறித்த விசாரணையைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை
எனவே மீண்டும் இவ்வாறான நிலை ஏற்படுவதைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மின்வெட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருந்தது.
அரச தரப்பு மின்வெட்டுக்கு காரணம் குரங்கு என்றும் பின்னர் நுரைச்சோலையில் ஏற்பட்ட பழுது என தெரிவித்தாலும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துக்கள் மாறுபட்டதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
