கனடாவில் பாடசாலை மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
                                    
                    Canada
                
                                                
                    World
                
                        
        
            
                
                By Beulah
            
            
                
                
            
        
    கனடாவில் பாடசாலைகளில் செல்பேசி பயன்பாட்டை மட்டுப்படுத்த அல்லது தடை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ரொறன்ரோ பாடசாலை சபை தெரிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து ரொறன்ரோ பாடசாலை சபை,
“கல்வி, சுகாதாரம் மற்றும் விசேட கல்வித் தேவைகளுக்கு மட்டும் செல்பேசி பயன்படுத்தப்பட வேண்டும்.
சமூக ஊடகப் பயன்பாடு
எனினும் தற்பொழுது அதிகளவில் சமூக ஊடகப் பயன்பாடு உள்ளிட்ட பல காரணிகளினால் செல்பேசிகளினால் பாதக விளைவுகள் ஏற்படுகிறது.

குறிப்பாக இளம் தலைமுறையினரின் உளச்சுகாதாரம் வெகுவாக பாதிபிற்குள்ளாகுகின்றது.” என சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், இந்த யோசனைத் திட்டத்தை வரவேற்பதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்