உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரித்தது சீமெந்தின் விலை!!
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Kanna
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 3000 ரூபாவாகும்.
தற்போதைய டொலர் நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் 25ம் திகதி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 2 750 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி