சீமெந்து மூடையின் விலை குறைப்பு..!
Cement Price in Sri Lanka
Ministry of Finance Sri Lanka
Nalin Fernando
By Dharu
எதிர்வரும் சில நாட்களில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் விலை குறைக்கப்படலாம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் விலை கிட்டத்தட்ட 300 ரூபா வரையில் குறைக்கப்படலாம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (01.06.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 6 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை

மேலும், மாதாந்தம் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.