இலங்கையில் அதிகரிக்கும் சிமெந்து தட்டுப்பாடு - கட்டுமான தொழிலாளர்கள் பாதிப்பு
srilanka
cement
shortage
By Sumithiran
இலங்கையில் சிமெந்து தட்டுப்பாடு தொடர்ந்தும் மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வியாபாரிகள் சிமெந்து விலையை உயர்த்துவதால், சில பகுதிகளில் ஒரு மூடை சிமெந்து 2,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
சிமெந்துக்கான விலையை அரசாங்கம் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கியதால் வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்து வருகின்றனர்.
நாட்டின் தேவையில் 40% சீமெந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு மீதமுள்ளவை இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் சிமெந்து இறக்குமதி தடைப்பட்டுள்ளது, இது சந்தையில் சிமெந்து நெருக்கடிக்கு வழியேற்படுத்தியுள்ளது.
அத்துடன் கட்டுமானத் தொழிலில் பணிபுரிபவர்கள் இதனால் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
