ஒரிரு நாட்களில் இலங்கைக்கு பண வரவு - மத்திய வங்கி ஆளுநர் சூசகம்
sri lanka
central bank of sri lanka
secretly
dollars
By Vanan
இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை கிடைக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பானது, இந்த வார இறுதிக்குள் 3 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும் எனவும்,
நிதி கிடைக்கப் பெறும் விதம் தொடர்பில் தற்போது கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டிற்கு நிதி கிடைக்கப் பெற்றவுடன், நிதி கிடைத்த விதத்தை வெளிப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி