எழுபது வீதம் உயர்த்தப்பட்ட மத்திய வங்கியின் சம்பளம்: நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்வி
இலங்கை(Sri Lanka) மத்திய வங்கியின் சம்பள உயர்வு தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல(Lakshman Kiriella) நாடாளுமன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதன்போது, இலங்கை மத்திய வங்கி கடந்த வருடத்தில் நூறு கோடிக்கும் அதிகமான நட்டத்தை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையிலும் எழுபது வீதத்தினால் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர் அவ்வாறு செய்வது சரியா எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
தீவிரமான பிரச்சினை
மேலும் இது தொடர்பில உரையாற்றிய விமல் வீரவன்ச(Wimal Weerawansa), “இலங்கை மத்திய வங்கியின் சம்பள உயர்வு கதை இன்னும் சரி செய்யப்படவில்லை.
இலங்கை அரசாங்கத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக மத்திய வங்கி செயற்படுமாயின் அந்த எண்ணம் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
அத்தோடு, உயர்த்துவது மிகவும் தீவிரமான பிரச்சினை” என்று அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |