வட்டி வீதங்கள் குறைப்பு: இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கி (Central Bank) அதன் கொள்கை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி நிலையான துணைநில் வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களில் (SLFR) மாற்றம் ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (23) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கி நாணய சபை
நிலையான துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை 25 அடிப்படைப் புள்ளிகளால் குறைத்து முறையே 8.25% மற்றும் 9.25% ஆக பேண மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது.
வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் சமீபகாலமாக நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு உரிமம் பெற்ற வங்கிகளில் அடமான முற்பணம் பெற்ற குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு தீர்மானித்துள்ளது
இந்த நிலையைக் கருத்தில் கொண்டு உரிமம் பெற்ற வங்கிகளில் அடமான முற்பணம் பெற்ற குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |