வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் சமீபகாலமாக நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியானது அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளதுடன், இதன் விளைவாக தங்கப் பொருட்களை அடமானம் வைப்பது வேகமாக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் சுமார் 210 பில்லியன் ரூபாவாக இருந்த அடமான முற்பணங்களின் நிலுவைத் தொகை, மார்ச் 2024 க்குள் 172% அதிகரித்து 571 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் அரசாங்கம் கூறுகிறது.
நிவாரணம்
இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகளில் அடமான முற்பணம் பெற்ற குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, வாடிக்கையாளர்கள் தனிநபர் அடிப்படையில் 2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற முற்பணத்துக்கு வருடாந்தம் 10 உச்ச எல்லைக்கு உட்பட்ட சலுகை வட்டியை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை நடைமறைப்படுத்த நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |