பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் - சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Batticaloa Sri Lanka Ceylon Teachers Service Union
By Kalaimathy Mar 06, 2023 07:49 AM GMT
Report

கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதிக்கு முன்னதாக ஆசிரியர் நியமனம் வழங்குவதாக கல்வி அமைச்சரினால் உறுதிமொழி வழங்கப்பட்டது.

எனினும், பரிட்சையின் பெறுபேறுகள் தாமதமாவதனால் இவர்களது நியமனம் தாமதமாவதாகவும், ஆசிரியர் நியமனங்களை காலவரையறையின்றி பிற்போட்டிருப்பதாகவும் அண்மையில் அறிவித்தல் வந்திருந்தது. 

இந்த நிலைமை தொடர்ந்தால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என இலங்கை ஆசிரியர் சங்கங்கத்தின் உபதலைவர் ஜீவராசா ருபேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கம் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“கடந்த வருடம் தங்களுடைய ஆசிரியர் கற்றலினை நிறைவு செய்த கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னதாக ஆசிரியர் நியமனம் வழங்குவதாக உறுதி மொழி வங்கப்பட்டது.

ஆசிரிய நியமனம்

பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் - சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Ceylon Teachers Union College Of Education Student

இருப்பினும் காலவரையறையின்றி நியமனம் வழங்கும் செய்ற்பாடு பிற்போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை நாங்கள் ஆராய்ந்து பார்க்கின்ற போது அவர்களுக்கு பரிட்சை நடைபெற்று, பரிட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு தாமதமாவதனால் இவர்களது நியமனம் தாமதமாவதாகவும்  கதை கூறப்பட்டிருக்கின்றது.

இருந்த போதும் இவர்களுடைய நியமனத்தினை வழங்குவதற்கு தேர்தல் திணைக்களம் அனுமதி வழங்கி இருக்கின்றது. அவ்வாறு அனுமதி வழங்கியதன் பிற்பாடு ஏன் இந்த மாணவர்களுக்கான ஆசிரியர் நியமனத்தினை பிற்போடுகின்றார்கள் என்கின்ற பாரிய பிரச்சினை எங்களுக்கு எழுந்திருக்கின்றது.

கடந்த காலத்திலே அரசாங்கத்தினுடைய திடீர் அறிவித்தலின்படி அரச ஊழியர்களின் ஓய்வு பெறுகின்ற வயதெல்லை மாற்றப்பட்டது. இதன் மூலமாக பல ஆசிரியர்கள் ஓய்வு பெற்றிருந்தார்கள். இதனால் பாடசாலையில் பாரிய அளவில் தளம்பல் நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

கல்வி அமைச்சருக்கு கோரிக்கை

பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் - சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Ceylon Teachers Union College Of Education Student

இந்த தளம்பல் நிலையினை சீர் செய்வதற்கு இந்த கல்வியியல் கல்லூரியின் ஆசிரியர்களுடைய நியமனத்தினை விரைவாக வழங்க வேண்டும். கல்வி அமைச்சருக்கு நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம், தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் இது பற்றிய கருத்துக்களை கூறுகின்றார். எங்களுடைய கலந்துரையாடலிலும் இது பற்றிய கருத்துக்களை கூறுகின்றார்.

ஊடகத்திற்கும் தெரிவிக்கின்றார். இருந்த பொழுதிலும் ஆசிரியர் நியமனத்தினை வழங்குகின்ற காலத்தினை நீட்டிக்கொண்டே செல்கின்றார். இவ்வாறு தொடர்ச்சியாக காலத்தினை நீட்டிக்கொண்டு செல்வதனால் அந்த ஆசிரிய மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள்.

இந்த ஆசிரிய மாணவர்கள் பாடசாலைகளிலே பயிற்சிக்காக இணைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் 5000 ரூபாய் கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது. இந்தத் தொகையை அதிகமாக அவர்களுக்கு வழங்குங்கள் என நாங்கள் கேட்டிருந்த போது, அரசாங்கம் அதனை வழங்கவில்லை.

இந்த காலகட்டத்தில் ஏழை ஆசிரிய மாணவர்கள் கடன் வாங்கியே தங்களது கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அதாவது அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கான வாடகை, உணவு போன்றவற்றிற்கு போக்குவரத்து போன்றவற்றிற்கு அதிக செலவினை செலவழித்திருந்தார்கள்.


இதற்கு அவர்கள் வாங்கிய கடனினை இன்று செலுத்த முடியாத நிலையில் கஷ்டப்படுவதாகவும் பல ஆசிரிய மாணவர்கள் எம்மைத்தொடர்பு கொண்டு தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே இவர்களுடைய இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு மிக விரைவாக ஆசிரியர் நியமனத்தினை வழங்குமாறு நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம்.

அவ்வாறு வழங்கப்படாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். இது தொடர்பாக கல்வி அமைச்சருக்கு எழுத்து மூலமான அறிவித்தலையும் வழங்கி இருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024