யாழ். நல்லூர் கடைக்குள் புகுந்து தங்கச் சங்கிலியை அறுத்த நபருக்கு நேர்ந்த கதி
யாழ். நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன் நாவற்குழியில் நேற்று (02) பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கபட்டார்.
நல்லூர் கோவில் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்து போல் வருகை தந்த நபரொருவர் அங்கு பணியாற்றிய பெண்ணின் தங்கச சங்கிலியை நேற்று முன்தினம் (01) அறுத்துச் சென்றுள்ளார்.
அத்தோடு,மோட்டார் சைக்கிள் ஒன்றையும் ஆசிரியர் ஒருவரிடமிருந்து பறித்துக்கொண்டு தப்பிச் சென்றிருந்தார்.
பல்வேறு குற்றச் செயல்கள்
இதனையடுத்து வர்த்தக நிலையத்திலிருந்த CCTV கமரா ஊடாக குறித்த நபரை இனங்கண்ட நாவற்குழி மக்கள் சந்தேகநபரை பிடித்து சாவகச்சேரி காவல்துறையினரிடம் இன்று ஒப்படைத்தனர்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்த 3 இலட்சம் ரூபா பணமும் மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச் செயல்கள் யாழ்.காவல் நிலைய பகுதிக்குள் இடம் பெற்றிருந்ததால், சந்தேக நபர் யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சந்தேக நபர் பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்புடையவர் எனவும், சிறைத் தண்டனை பெற்று ஒருவாரத்துக்கு முன்னரே விடுதலையானவர் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 21 மணி நேரம் முன்