தமிழ் மக்கள் பற்றி இந்தியாவில் வைத்து அநுரகுமார கூறியது என்ன?
அண்மையில் இந்தியா சென்றிருந்த சிறிலங்காவின் அரசதலைவர் அநுரகுமார திசநாயக்க அங்குவைத்து ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “மக்கள் இனவாதத்தைக் கடந்து வாக்களித்துள்ளார்கள், வடக்கு கிழக்கு என்றோ மலையகம் என்றோ தெற்கு என்றோ வேறுபாடு காண்பிக்காமல் “இலங்கை“ என்கின்ற ஒன்றுக்காவே அவர்கள் வாக்களித்து இருக்கின்றார்கள்.
மக்களுடைய ஆணை இலங்கை ஒன்றுபட்டுவிட்டது என்பதுதான், அந்த ஆணையின் அடிப்படையில்தான் நான் இலங்கையில் ஆட்சி நடாத்தப்போகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே மேலோட்டமாகப் பார்ப்பதற்கு மிக அழகான, நியாயமான ஒரு கூற்றுத்தான்.
ஆனால் தமிழர்களுக்கு ஆபத்தைத் தரவல்ல ஒரு இரகசியம் இந்தப் பேச்சின் பின்னால் இருக்கின்றது என்று கூறுகின்றார்கள் நோக்கர்கள்.
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |