சால்வையின்றி நாடாளுமன்றம் வந்த ராஜபக்ச சகோதரர்
parliament
samal rajapaksha
srilankaka
By Sumithiran
பழுப்பு நிற சால்வையை அணிந்து வரும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று சால்வையின்றி நாடாளுமன்றுக்கு பிரசன்னமாகியிருந்தார்.
அவரிடம் தோன்றிய இந்த மாற்றம் குறித்து பலரும் பேசிக் கொண்டிருந்ததாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிவரிசையில் நான்காவது ஆசனத்தில் அமர்ந்தார்.
இதனிடையே, சால்வைஅணியாதது குறித்து ஊடகவியலாளர்கள் குழு அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் உறுதியான பதில் எதனையும் அளிக்கவில்லை.
பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் வழிமைபோன்று சால்வையை அணிந்திருந்தனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி