பிணை பெற்றும் சாமர சம்பத் விளக்கமறியலுக்கு..!
புதிய இணைப்பு
மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று (27.03.2025) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 01.04.2025 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (27) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
விசாரணைகளை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், முன்வைக்கப்பட்ட சாட்சிகளை பரிசீலித்த நீதவான் பிணையில் செல்ல உத்தரவிட்டதுடன், வெளிநாடு செல்லவும் தடை விதித்தார்.
இந்நிலையில், இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும், மற்றொரு வழக்கிற்காக சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
செய்திகள் : டில்ஷான் வின்சன் [ LANKASRI ]
இரண்டாம் இணைப்பு
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (27.03.2025) கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், முன்வைக்கப்பட்ட சாட்சிகளை பரிசீலித்த நீதவான் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வெளிநாடு செல்வதைத் தடை விதித்த நீதவான் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (27.03.2025) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (27) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
அதன்படி, விசாரணைகளை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுளளதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
