பிள்ளையான் கைதிற்கு நான் தான் காரணம்: உண்மையை போட்டுடைத்த சாணக்கியன் எம்.பி
பிள்ளையானை (Pillayan) கைது செய்து விசாரித்தால் பல உண்மைகளை கண்டரியலாம் என 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தனது உரையில் தெரிவித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Rasamanickam Shanakiyan) தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த 2023 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு வெடிப்பின் (Easter attack) நான்காவது ஆண்டு பூர்தியை முன்னிட்டு நீதி கோரி இடம்பெற்ற நிகழ்வில் அசாத் மௌலான ஐ.நாவிற்கு சமர்பித்த அறிக்கையை சமர்பித்திருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிள்ளையானுக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக சாணக்கியன் கூறியதன் அடிப்படையில் தனக்கு எதிராக மான நஷ்டம் கோரி வழக்கு தொடரப்பட்டதாக சாணக்கியன் கூறியுள்ளார்.
குறித்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தவற்றை காணொளியில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
