பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் அதிக வாய்ப்பு: சமன் ஸ்ரீ ரத்நாயக்க
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து 66 நாட்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் புதிய ஜனாதிபதி தனக்கு பொருத்தமான நாடாளுமன்ற உறுப்பினர இல்லை என நினைத்தால் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
அவ்வாறு நடந்தால் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்புமனுக்கள் கோரப்பட்டு 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும் என சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் செம்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பரந்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |