சந்திரயான் -3: விக்ரம் லேண்டர் தொடர்பில் நாசா வெளியிட்டுள்ள தகவல்

United States of America NASA ISRO Chandrayaan-3
By Shadhu Shanker Jan 23, 2024 07:09 AM GMT
Report

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டரை, அமெரிக்க விண்கலமொன்று தொடர்புகொண்டுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் திகதி சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியது.

வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு சந்திரயான்-3 விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் திட்டமிட்டபடி 14 நாள்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டன.

"விரைவில் இந்தியா முழுவதையும் ராம ராஜ்ஜியமாக மாற்றுவோம்" தமிழக ஆளுநர்

"விரைவில் இந்தியா முழுவதையும் ராம ராஜ்ஜியமாக மாற்றுவோம்" தமிழக ஆளுநர்

சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டர்

இதனை தொடர்ந்து, விக்ரம் லேண்டா் மற்றும் ரோவா் ஆகியவை உறக்க நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டதால் இஸ்ரோவோல் அவற்றை தொடர்புகொள்ள முடியவில்லை.

சந்திரயான் -3: விக்ரம் லேண்டர் தொடர்பில் நாசா வெளியிட்டுள்ள தகவல் | Chandrayaan 3 Vikram Lander Nasa Isro India Space

இந்நிலையில், நிலவை சுற்றிவந்தபடி ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் ஆா்பிட்டர் (எல்ஆா்ஓ), சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டரை தொடா்புகொண்டுள்ளதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாசாவின் ஆர்பிட்டா் கடந்த ஆண்டு டிசம்பா் 12-ஆம் திகதி நிலவின் தென் துருவத்தைக் கடக்கும்போது, விக்ரம் லேண்டரில் இடம்பெற்றுள்ள சிறிய அளவிலான லேசா் கருவியுடன் தொடா்பை ஏற்படுத்தியது.

நாடு திரும்பினார் அதிபர் ரணில் விக்ரமசிங்க

நாடு திரும்பினார் அதிபர் ரணில் விக்ரமசிங்க

நாசாவின் ஆா்பிட்டர்

அதாவது, நாசாவின் ஆா்பிட்டரிலிருந்து லேசா் கதிா்வீச்சை அனுப்பி, அதன் பிரதிபலிப்பு சிக்னல் திரும்புவதன் அடிப்படையில் கணக்கிடப்படும் நடைமுறையின் அடிப்படையில், விக்ரம் லேண்டருடனான தொடா்பை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சந்திரயான் -3: விக்ரம் லேண்டர் தொடர்பில் நாசா வெளியிட்டுள்ள தகவல் | Chandrayaan 3 Vikram Lander Nasa Isro India Space

இந்த லேசா் கதிா்வீச்சை அனுப்பும்போது நாசா ஆா்பிட்டருக்கும், விக்ரம் லேண்டருக்கும் 100 கி.மீ. தொலைவு இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனா். பொதுவாக, விண்வெளியில் புவியைச் சுற்றிவந்து ஆய்வு செய்துவரும் செயற்கைக்கோள்களின் இருப்பிடத்தைக் கணக்கிடுவதற்கு, இந்தத் தொழில்நுட்பத்தை நாசா விஞ்ஞானிகள் பயன்படுத்தி வருகின்றனா்.

அதாவது, நிலையாக உள்ள பூமியின் தரைப் பரப்பிலிருந்து லேசா் கதிா்வீச்சை நகா்ந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோளின் மீது அனுப்பி, அதன் இருப்பிடம் கணக்கிடப்படும்.

இலங்கை நோக்கி திரும்பிய இந்தியாவின் கவனம்: அயோத்தியை தொடர்ந்த நகர்வு

இலங்கை நோக்கி திரும்பிய இந்தியாவின் கவனம்: அயோத்தியை தொடர்ந்த நகர்வு

அடுத்தகட்ட தொழில்நுட்பம்

இந்தச் சூழலில், எதிா்மறையாக நகா்ந்துகொண்டிருக்கும் ஆா்பிட்டரிலிருந்து, நிலவின் பரப்பில் நிலையாக இருக்கும் லேண்டா் மீது லேசா் கதிா்வீச்சை அனுப்பி, அதன் இருப்பிடத்தைக் கணக்கிட்டு நாசா விஞ்ஞானிகள் தற்போது சாதனை படைத்துள்ளனா்.

சந்திரயான் -3: விக்ரம் லேண்டர் தொடர்பில் நாசா வெளியிட்டுள்ள தகவல் | Chandrayaan 3 Vikram Lander Nasa Isro India Space

இந்த லேசா் கதிா்வீச்சை அனுப்பும் கருவியானது எந்தவித பராமரிப்பும், மின்சாரமும் இன்றி பல ஆண்டுகளுக்குச் செயல்படும் திறன் கொண்டது.

அடுத்தகட்டமாக, இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, எதிா்கால தொடா் பயன்பாட்டுக்கு உகந்ததாக உருவாக்கப்படும் என்று நாசா விஞ்ஞானி ஷியோலி சுன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்