"விரைவில் இந்தியா முழுவதையும் ராம ராஜ்ஜியமாக மாற்றுவோம்" தமிழக ஆளுநர்
விரைவில் இந்தியா முழுவதையும் ராம ராஜ்ஜியமாக மாற்றுவோம் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சென்னை நாரத கான சபாவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன
இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.
அதன்போது கருத்து தெரிவித்த அவர் "பாரத நாடு ஸ்ரீராமர் இல்லாமல் இல்லை, ராமர் எல்லா இடங்களிலும் வசித்து வருகிறார். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ராமரை பற்றி தெளிவாக கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் ராம ராஜ்ஜியம்
ராமர், பாரதம், தமிழ்நாடு மூன்றையும் எவராலும் பிரிக்க முடியாது. ராமர் உருவாக்கிய ராஜ்ஜியத்தை போல, பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக இந்தியாவை வலுவான நாடாக உருவாக்கி வருகிறார்.
10 ஆண்டுகளில் நாட்டு மக்கள் அடி நிலையிலிருந்து மேல் நிலைக்கு வர தொடங்கியுள்ளனர். கூடிய விரைவில் இந்தியா முழுவதையும் ராம ராஜ்ஜியமாக மாற்றுவோம்.
மொழி, இனம், கலாச்சாரம் ஆகியவற்றை சுயநலத்திற்காக பிரித்துக் கொண்டிருந்தனர், இனி அவ்வாறு எவராலும் பிரிக்க முடியாது.
ராம ராஜ்ஜியத்தின் அஸ்திவாரம் அமைத்த நாள் இன்று. சுதந்திர தினம் எவ்வளவு முக்கியமோ அதுபோன்ற நாள் இது. ராமர் இல்லாமல் பாரதத்தை நினைத்துப் பார்க்க முடியாது. தமிழ் இலக்கியங்களில் ராமர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |