சுதந்திரக் கட்சியை சுவீகரிக்க முயலும் சந்திரிக்கா! தீட்டப்பட்ட புதிய வியூகம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைக் குறிவைத்து முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க(Chandrika Bandaranaike Kumaratunga) புதிய வியூகமொன்றை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு எதிராக சந்திரிகாவால் கொழும்புமேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கில் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதிவரை சுதந்திரக் கட்சியின் தலைவராகத் தொடர்வதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்றையதினம்(04) கட்டாணை பிறப்பிக்கப்பட்டது.
சுதந்திரக் கட்சி
இதையடுத்து கட்சியில் இருந்து மைத்திரியால் விலக்கப்பட்ட சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க, அமைச்சரான மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சரான லசந்த அழகிய வன்ன ஆகியோர் புதிய பாதையில் சுதந்திரக் கட்சி பயணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனால் சந்திரிகா மீண்டும் சுதந்திரக் கட்சியின் தலைவராக வருவதற்குரிய காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பலர் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |