இன்று ஆரம்பிக்கப்படவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa )தலைமையில், இன்று (05) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
தற்போது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்காக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபை
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் (G. L. Peiris) தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா (Dilan Perera) தெரிவித்துள்ளார்.
எனினும் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) உள்ளிட்ட 4 பேர் இந்த புதிய கூட்டணியில் இணையமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களைத் தவிர, தமது கடந்த கால தவறை உணர்ந்து, புதிய கூட்டணிக்கு வரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்வதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |