சந்திரனின் மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பியுள்ள சீனாவின் விண்ணோடம்
நிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக சீனாவால் (China) அனுப்பி வைக்கப்பட்டிருந்த Chang’e 6 என்ற விண்ணோடம் வெற்றிகரமாக பூமியை வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், பூமியை வந்தடைந்த Chang’e 6 விண்வெளியில் இருந்து ஏறக்குறைய இரண்டு மாதங்கள் கழித்து பூமிக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்கலமானது சீனாவின் வடக்குப் பகுதியான இன்னர் மங்கோலியாவில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் சீன விண்கலம் தரையிறங்கியதைத் தொடர்ந்து அதிகாலை 1:41 மணிக்கு சீன விஞ்ஞானிகள் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.
சந்திர ஆய்வுப் பணி
இதனடிப்படையில், இதுவே பூமிக்கு திரும்பிய முதல் சந்திரன் தூர மாதிரிகள் ஆகும் அத்தோடு சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்தின் (CNSA) தலைவர் ஜாங் கேஜியன், கட்டுப்பாட்டு அறையில் இருந்து Chang’e 6 சந்திர ஆய்வுப் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Everything is ready for the arrival of the Chang'e 6 Moon samples in the next few hours. #Change6 #China pic.twitter.com/2gKA33UhQZ
— Space Intelligence (@SpaceIntel101) June 24, 2024
மேலும், Chang'e-6 ஆய்வு சந்திரனின் தொலைதூரப் பக்கத்திலிருந்து இரண்டு கிலோகிராம் நிலவு, தூசி மற்றும் பாறைகளுடன் பூமிக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




