மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல் - கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்
இன்று (02) முதல் தோலுடன் கூடிய கோழியிறைச்சியின் விலையை நூறு ரூபாவிற்கும் மேல் குறைப்பதற்கு கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளது.
கோழியிறைச்சி மற்றும் முட்டையின் விலையை குறைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (01) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது ஒரு கிலோகிராம் கோழியிறைச்சியினை 1250 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது.
கோழியிறைச்சி இறக்குமதி

இது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து தெரிவித்த போது, “முட்டை விலையை கட்டுப்படுத்துவதற்காக மேலும் 91 மில்லியன் முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
கோழியிறைச்சியின் விலை குறைக்கப்படாவிட்டால், நுகர்வோரை பாதுகாக்க இந்தியாவில் இருந்து கோழியிறைச்சி இறக்குமதி செய்ய வேண்டும்.
கோழியிறைச்சி மற்றும் முட்டையில் நம் நாடு தன்னிறைவு பெற்றுள்ள போதிலும், முட்டை மற்றும் கோழியிறைச்சியின் விலை அதிகரிப்பு, நாட்டின் புரதத் தேவைக்கு சிக்கலாக மாறியுள்ளது.
எனவே இத்தொழிலை பாதுகாக்கும் வகையில் முட்டை மற்றும் கோழிஇறைச்சியின் விலை குறைக்கப்பட வேண்டும்” என்றார்.