ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மாற்றமா..! கிடைத்தது பதில்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் தலைமைத்துவத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று அக்கட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இத்தகைய மாற்றம் செய்யப்படும் என்று வெளியிடப்பட்ட செய்திகள் குறித்து இன்று (13) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் எதிர்பார்ப்பு
அதன்போது அவர் மேலும் கூறுகையில், "ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை, சஜித் பிரேமதாசவின் தலைமை, ஒருபோதும் மாறாது. நாடாளுமன்றத் தேர்தலை விட உள்ளூராட்சித் தேர்தலில் எங்களுக்கு சிறந்த முடிவு கிடைத்தது.
அது நாம் பெருமைப்பட வேண்டிய முடிவு அல்ல. ஆனால் அது ஒப்பீட்டளவில் நல்ல முடிவு.
அடுத்து மாகாண சபைத் தேர்தல்கள், அடுத்து ஜனாதிபதித் தேர்தலும், பின்னர் நாடாளுமன்றத் தேர்தலும். வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களில், ஐக்கிய மக்கள் தனிக் கட்சியாக போட்டியிட முடியும்.இந்த முறை, எங்கள் 1700 உறுப்பினர்களும் இலங்கை முழுவதும் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளனர்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

