பிரதமர் பதவியில் மாற்றம் - காரணம் கூறும் மொட்டுக் கட்சி
வெளியக அழுத்தம் காரணமாகவே பிரதமர் பதவிக்கு ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya ) நியமிக்கப்பட்டார். எனவே, அந்தப் பதவியில் மாற்றம் வராது என சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவினால் விண்ணிற்கு செலுத்தப்பட்ட சுப்ரீம் சட் 1 என்ற செய்மதி தொடர்பில் பிரதமர் ஹரிணி தெரிவித்த கருத்துக்கள் அரசியல் பரப்பில் சர்ச்சையான நிலைமையை தோற்றுவித்துள்ளன.
அரசாங்கத்திற்குள் உள்ளக மோதல்கள்
பிரதமருடைய இந்த கருத்தினால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குள் உள்ளக மோதல்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவுக்கு அநுர அரசு செல்லாது என சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் மாற்றம் நிகழாது. ஏனெனில் வெளியக அழுத்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட நியமனம் அது என பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா
