டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்: இன்றைய நாணய மாற்று விகிதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்தை விட இன்று (06) இலங்கையில் வர்த்தக வங்கிகளில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில், மக்கள் வங்கியில் நேற்றைய தினம் (05) 313.37 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 313.85 ரூபாவாக உயர்ந்துள்ளது.விற்பனை பெறுமதியும் 328.09 ரூபாவிலிருந்து 328.60 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் நேற்றைய தினம் (05) 313.23 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 313.74 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 324.50 ரூபாவிலிருந்து 325 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில் நேற்றைய தினம் (05) 315 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 316 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி 326 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கியின் அறிக்கை
இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (6) வெளியிட்டுள்ள நாணய மாற்று அறிக்கையின் படி நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 93 சதம் - விற்பனை பெறுமதி 327 ரூபா 51 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 395 ரூபா 75 சதம் - விற்பனை பெறுமதி 413 ரூபா 37 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 31 சதம் - விற்பனை பெறுமதி 353 ரூபா 47 சதம்.
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபா 89 சதம் - விற்பனை பெறுமதி 241 ரூபா 62 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 67 சதம் - விற்பனை பெறுமதி 210 ரூபா 72 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 44 சதம் - விற்பனை பெறுமதி 241 ரூபா 96 சதம்.