ஆட்சி மாற்றம் நிச்சயம் -அணி திரளுங்கள் - இலங்கை மக்களுக்கு அழைப்பு(photos)
மக்களை அடக்கியாளும் தற்போதைய அரசாங்கம் நிச்சயமாக வெளியேற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
74 ஆண்டு கால சாபத்திற்கு முடிவு கட்டுவோம், அடக்குமுறை அரசாங்கத்தை அகற்றுவோம் என்ற தலைப்பில் இன்றையதினம் இடம்பெற்ற கண்டன பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமக்கு முன்னால் இருப்பது கட்சிகள் ஒருவரையொருவர் பிரித்து வெறுப்பைக் கட்டியெழுப்பக்கூடிய நாடு அல்ல என அவர் இதன்போது தெரிவித்தார்.
நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான புதிய நாட்டை உருவாக்குவதற்கு அணிதிரளுமாறு அனைத்து இலங்கை மக்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
'எரிபொருள் விலை விண்ணை முட்டும், எண்ணெய் வரிசைகள் நீடிக்கிறது, மின்சாரம் இல்லை, எண்ணெய் இல்லை, எரிவாயு இல்லை, வயல் இல்லை, சகிப்புத்தன்மை இல்லை', 'வாரே புத்தே' போன்ற முழக்கங்களை எழுப்பியவாறு நாட்டை கட்டியெழுப்புவாம் என தெரிவித்து போராட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் சாலையில் சுமார் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த பேரணியில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.





