கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற விரும்புவோருக்கு முக்கிய செய்தி! விலைகளில் திடீர் மாற்றம்
கனடாவில் (canada) 2024ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல், குறிப்பிட்ட நிரந்தரக் குடியிருப்பு (PR) கட்டணங்களை அதிகரிக்க இருப்பதாக புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அறிவித்துள்ளது.
கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின்படி(IRPR) இந்த கட்டண உயர்வு அறிமுகப்படுத்தப்படுவதாக கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிப்பவர் மற்றும் அவரது கணவன் அல்லது மனைவிக்கான கட்டணம் 515 கனேடிய டொலர்களிலிருந்து 575 டொலர்களாக உயர இருக்கிறது.
குழந்தைகளுக்கான விண்ணப்பம்
பெடரல் திறன்மிகுப் பணியாளர்கள், மாகாண நாமினி திட்டம், கியூபெக் திறன்மிகுப் பணியாளர் திட்டம், அட்லாண்டிக் புலம்பெயர்தல் வகுப்பு முதலான திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவருக்கான கட்டணம் 850 டொலர்களிலிருந்து 950 டொலர்களாகவும், விண்ணப்பிப்பவரின் கணவன் அல்லது மனைவிக்கான கட்டணம் 850 டொலர்களிலிருந்து 950 டொலர்களாகவும் அதிகரிக்க உள்ளது.
இந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான விண்ணப்பம் 230 டொலர்களிலிருந்து 260 டொலர்களாக உயர இருக்கிறது.