தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்
பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், முதன்முறையாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முதலில் இந்த அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், தற்போதைய நிலையில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு உறுதிப்படுத்தல் கடிதம் மட்டுமே வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை மாணவர்
அத்தோடு, இந்த திட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு வருடத்திற்குள் பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு வழமை போன்று இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை
இதனடிப்படையில், ஒரு நாள் சேவை அல்லது பொதுச் சேவைகளின் கீழ் ஆட்கள் பதிவுத் திணைக்களத்தில் இதனை பெறலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை வழங்குவது தேசிய தரவு முறைமை தயாரிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |