யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்றிரவு ஏற்பட்ட குழப்பம்

Sri Lanka Police Jaffna Nallur Kandaswamy Kovil
By Sumithiran Sep 12, 2023 10:30 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் சுற்று வீதியில் நேற்றிரவு ஏற்பட்ட சனநெரிசலால் திடீர் நெருக்கடி ஏற்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நல்லூர் சப்பறத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில் பக்தர்கள் வருகை தரவும் செல்வதற்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பலர் மூச்சுத்திணறலால் அவதி

பருத்தித்துறை வீதி பாதை முற்றாக மூடப்பட்ட நிலையில் மற்றைய சிவன்கோவில் பாதையிலும் மாநகர சபை தடுப்புக்கள் முற்றாக விலக்கப்படாத நிலையில் சனநெரிசல் அதிகரித்து பலர் மூச்சுத்திணறலால் அவதியுற்றதுடன் நோயாளர் காவுவண்டி வருவதிலும் நெருக்கடி ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்றிரவு ஏற்பட்ட குழப்பம் | Chaos In Nallur Jaffna Tonight

இதனை சாதகமாகப் பயன்படுத்திய விஷமிகள் அங்க சேஷ்டையில் ஈடுபட்டதுடன், திருடர்கள் பெருமளவு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதுடன் ஒருவர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்.

நல்லூர் கந்தனின் சப்பற திருவிழா (நேரலை)

நல்லூர் கந்தனின் சப்பற திருவிழா (நேரலை)

நகைகளும் திருட்டு

குறித்த நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டதுடன் பெருமளவான நகைகளும்  அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்றிரவு ஏற்பட்ட குழப்பம் | Chaos In Nallur Jaffna Tonight

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த யாழ்ப்பாண பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் தலைமையிலான குழு உடனடியாக கோவில் அருகில் ஆலயத்தினரால் போடப்பட்ட வீதித்தடைகளை தளர்த்தி பக்தர்கள் செல்ல வழி ஏற்படுத்தினர்.


இரும்பு தகடுகளால் அடைக்கப்பட்ட பாதை

பருத்தித்துறை வீதியை மறித்து நல்லூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தினால் இரும்பு தகடுகளால் அடைக்கப்பட்ட பாதையும் இதன்போது பக்தர்களால் உடைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்றிரவு ஏற்பட்ட குழப்பம் | Chaos In Nallur Jaffna Tonight

சப்பறத் திருவிழாவிலேயே இவ்வாறான நெருக்கடி ஏற்பட்டால் இன்றைய தேர்த்திருவிழாவில் இந்நிலை மோசமாகும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்ததுடன் இது தொடர்பில் யாழ் மாநகர சபை காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021