சாட்ஜிபிடியால் அதிஷ்டம் கண்ட அமெரிக்க பெண்: வென்ற பெருந்தொகை பணம்
அமெரிக்க (America) பெண் ஒருவர் சாட்ஜிபிடி (ChatGPT) செயலியை பயன்படுத்தி லாட்டரி வென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்தவர் கேரி எட்வர்ட்ஸ் என்ற பெண்ணே இவ்வாறு லாட்டரி வென்றுள்ளார்.
குறித்த பெண் லாட்டரி வாங்குவதை வழமையாக கொண்டுள்ளார்.
எண் தொடர்
இந்தநிலையில் அவர் லாட்டரி வெல்ல முடிவு செய்து சாட்ஜிபிடியிடம் தற்போது எந்த எண் தொடர் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கலாம் என பரிந்துரை பெற்றுள்ளார்.
இதையடுத்து, சாட்ஜிபிடியின் தகவலின்படி வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசு விழுந்துள்ளது.
இறந்த கணவர்
அத்துடன் வென்ற பணம் அனைத்தையும் தனது இறந்த கணவரின் பெயரில் நன்கொடையாக வழங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் சாட்ஜிபிடியின் உதவியால் லாட்டரி வென்ற இந்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
