இஸ்ரேலில் பரிதாபமாக பலியான இலங்கை தமிழர்
இஸ்ரேலில் பணியில் இருந்தபோது கார் விபத்தில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்போது, கொழும்பு, முல்லேரியாவ நியூ டவுனில் வசிக்கும் 43 வயதான அந்தோணி ஞானபிரகாசம் என்பவரே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இஸ்ரேலிலும் இறுதி மரியாதை
அவர் கடந்த 2024 டிசம்பரில் கட்டுமானத் துறையில் வேலை செய்வதற்காக இஸ்ரேலுக்குச் சென்றிருந்த நிலையில், இவ்வாறு நேற்று விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அதன்படி, அவரது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவரது உடல் நாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.
எவ்வாறாயினும், உடலத்தை இலங்கையை இலங்கைக்கு அனுப்புவதற்கு முன் கிறிஸ்தவ மத சடங்குகள் மற்றும் இறுதி மரியாதைகள் 29 ஆம் திகதி இஸ்ரேலில் உள்ள இறுதிச் சடங்கு இல்லத்தில் நடைபெறும் என்று தூதவர் அந்நாட்டிலுள்ள இலங்கையர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
