Ghibli - செயலி பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஜிப்லி (Ghibli) செயலியை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுமாறு செயலியின் செயற்றிட்ட அதிகாரி சாம் ஆல்ட்மேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஜிப்லி செயலி உலகளாவிய ரீதியில் வைரலாகி வருகின்றது.
ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட் ஜிபிடி (ChatGPT)உலக அளவில் பலரால் பயன்படுத்தப்படும் ஒரு தளமாக மாறியுள்ளது.
ஆவணங்கள்
பைல் தயாரிப்பு, ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும் கோடிங் என பல பயன்பாடுகளுக்கு சாட்ஜிபிடியை உலகளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், சாட் ஜிபிடியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகின்றது.
சமீபத்தில் சாட்ஜிபிடி, ஜிப்லி என்ற புதிய புகைப்பட செயலியை இலவசமாக அறிமுகப்படுத்தியது.
புகைப்படங்கள்
பயனாளர்கள் தங்கள் புகைப்படங்களை சாட்ஜிபிடியில் பதிவேற்றி ஜிப்லி அம்சத்தில் மாற்றி கேட்டால் அது அனிமேஷன் பாணியில் புகைப்படங்களை மாற்றி தரும்.
இந்தநிலையில், ஏராளமான இணையவாசிகள் தங்கள் புகைப்படங்களை ஜிப்லி அம்சத்தில் மாற்றி அமைக்க ஆரம்பித்துள்ளனர்.
இது உலகளாவிய ரீதியில் தற்போது வைரலாகியுள்ள நிலையில் இணையவாசிகள், தங்களது புகைப்படங்களை ஜிப்லி அம்சத்தில் மாற்றி அதை காணொளியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இணையவாசிகள்
இந்தநிலையில், பலர் ஒரே நேரத்தில் இந்த செயலியை பயன்படுத்த ஆரம்பித்ததால் சாட்ஜிபிடியின் செயல் வேகம் குறைந்து புகைப்படங்கள் சரியாக ஜெனரேட் ஆகாமல் சிக்கலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சாட்ஜிபிடியின் செயற்றிட்ட அதிகாரி சாம் ஆல்ட்மேன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஏராளமானோர் ஜிப்லிபை செய்து வருவதால் சாட்ஜிபிடி சர்வர்கள் ஓவர்லோட் ஆகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தங்களது நிறுவன ஊழியர்கள் தூக்கமின்றி தவிப்பதாகவும் ஜிப்லி செயலி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
