கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் !
கனடாவில் (Canada) இரண்டு லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வழங்கப்படவுள்ள வேலையிற்கு குறைந்தபட்ச ஊதியம் மணித்தியாலம் ஒன்றுக்கு 20 டொலர்கள் என தெரிசவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்புகள் பொருளாதார நிலைமையை மேம்படுத்த விரும்பும் நபர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபரல் கட்சியின் தலைவர்
லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி, கனடாவின் 24 வது பிரதமராக பதவியேற்ற சில நாட்களில் திடீர் தேர்தல் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரே, என்டிபி தலைவர் ஜக்மீத் சிங், கிரீன் கட்சி தலைவர்கள் எலிசபெத் மே மற்றும் ஜோனாதன் பெட்நோல்ட் உள்ளிட்டோர் நாடு முழுவதும் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெறும், முன் கூட்டிய வாக்குப்பதிவு ஏப்ரல் 18 முதல் 20 ம் திகதி வரையில் வரை நடைபெறும்.
இந்தநிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக இவ்வாறு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் பணிகளில் ஈடுபடத் தேவையான தகுதிகள்
- கனடா குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 16 வயது நிறைவு செய்ய வேண்டும்.
- பணியின் போது எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது.
- வாசிப்பு, எழுத்துத் திறன்கள், மக்கள் தொடர்புத் திறன், மாற்றுத்திறனாளிகளை உதவிக் காணும் திறன், கவனக்குறைவு இல்லாத தன்மை, மற்றும் வழிமுறைகளை பின்பற்றும் திறன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

