வைத்தியதுறையின் உண்மைகளை மறுக்கும் தமிழ் அரசியல்வாதிகள்: வைத்தியர் அர்ச்சுனா ஆதங்கம்
தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும் இடங்களில் நான் வேலை செய்யமாட்டேன் என்ற முடிவுடன் நான் வெளியேறுகின்றேன், என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தனியார் சமூக வலைத்தளமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அரசினால் வழங்கப்பட்டுள்ள விடுதியை 3 மாதகாலம் தனது பாவனைக்காக, வைத்திருப்பதாகவும் அதனை உடைக்கவோ, வேறுநடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.
வைத்தியர் அர்ச்சுனா
மேலும் யாழ்ப்பாணம் எந்த நிலைமைக்கு போகுமோ என தெரியவில்லை என்றும் கவலை வெளியிட்டுளார்.
எனது உயிரை பணயவைத்து வைத்தியத்துறையை உயர்த்த நினைத்தும் முடியாமல் போனதை எண்ணி கவலை அடைவதாக ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
என்னை பற்றிய அனைத்து விடயங்களையும், நான் பொது வெளியில் குறிப்பிட்டுள்ளேன்.ஒரு அரசியல்வாதியையாவது, தங்களை பற்றி உண்மைகளை சொல்லுமாறு சவால் விடுத்துள்ளார். அநீதியை கண்டு பொறுத்துக்கொண்டு இருக்கவேண்டுமானால் என்னால் முடியாது நான் கேள்வி கேட்பேன் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |