வைத்தியர் ரஜீவை வெளியேற்றி விட்டு நாற்காலியில் அமர்ந்த அர்ச்சுனா : சாவகச்சேரி வைத்தியசாலையில் அதிரடி
புதிய இணைப்பு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அட்சகராக அர்ச்சுனா இராமநாதன் இன்று (15) மீண்டும் தனது நாற்காலியில் அமர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த (9.7.2024) அன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக கடமைகளைப் பொறுப்பேற்ற வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவை தற்போது வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
இன்று திங்கட்கிழமை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு பணிக்குத் திரும்புவேன் (Chavakachcheri Base Hospital) என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனத்தில் காணப்படும் சர்ச்சைகள் தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனா கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள நேரலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்தும் வைத்தியர் அர்ச்சுனா இதன்போது விளக்கமளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ள கருத்துக்கள் கீழுள்ள காணொளியில்,
Exclusive - எனது அடுத்தக்கட்ட நகர்வுகளை கேட்டு அச்சமடைந்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் - பகிரங்கப்படுத்தும் வைத்தியர் அர்ச்சுனா
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |